Sunday, April 25, 2010

பிடித்த‌ 10 ப‌ட‌ங்க‌ள்

பிடித்த‌ 10 ப‌ட‌ங்க‌ள் தொட‌ர்ப‌திவுக்கு டிக்கெட் வாங்கி கொடுத்த‌ ப‌திவுல‌கின் குழ‌ந்தை, ந‌ண்ப‌ர் சைவ‌கொத்துப்ப‌ரோட்டாவுக்கு ந‌ன்றி :)

விதிகள்:


1. தமிழ்ப் படங்கள் மட்டுமே
2. குறைந்த பட்சம் எடுத்த வரைக்கும் திருட்டி டிவிடியாவது வந்திருக்க வேண்டும்.
3. அடல்ட்ஸ் ஒன்லி படங்கள் அனுமதி இல்லை (நியூ உட்பட).............ந‌ல்லாத்தான்யா யோசிக்க‌றீங்க‌ ரூல்ஸையெல்லாம்!


காதலிக்க நேரமில்லை

இன்றல்ல, இன்னும் 20௦ வருடங்கள் கழித்து பார்த்தாலும், ரசித்து பார்க்கலாம். சூப்பர் ஹிட் பாடல்கள், போரடிக்காத திரைக்கதை, கொஞ்சம் கூட விரசமில்லாத நகைச்சுவை...வேறென்ன வேண்டும்? ரவிச்சந்திரன், முத்துராமன் ஆகியோர் இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்தது பாலையா-நாகேஷ் கூட்டணிதான். யாரால் மறக்க முடியும் நாகேஷ் கதை சொல்லும் காட்சியை?

படத்துக்கு மேலும் பலம் சேர்த்தவர் எம்.எஸ்.வி. 'விஸ்வநாதன் வேலை வேண்டும்', 'அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்', 'இந்த பொன்னான கைகள் புண்ணாகலாமா உதவிக்கு வரலாமா' போன்ற பாடல்கள் இன்றும் ரசிக்க வைக்கிறது.

புதிய பறவை

ஒவ்வொருவருக்கும் சிவாஜி நடித்ததில் இதுதான் பெஸ்ட் என்று ஒரு படம் இருக்கும். நான் பார்த்தவரையில் எனக்கு மிகவும் பிடித்த சிவாஜி படம் என்றால் அது புதிய பறவைதான். இப்போது பார்த்தால், க்ளைமேக்ஸுக்கு முந்தைய சீன் வரை வரை சிவாஜியின் நடிப்பை ஓவர் ஆக்டிங், ஓவர் சீன் என்று நம்மால் கமெண்ட் அடிக்கமுடியும். ஆனால் க்ளைமேக்ஸில் தான் நிரபராதிதான் என நிரூபிக்க முயலும்போது அவர் படும் பாடு நம்மை கட்டி போட்டு விடும். தன்னை சுற்றி சரோஜா தேவி, சௌகார் ஜானகி, எம்.ஆர்.ராதா, வி.கே.ராமசாமி என்று பல ஜாம்பவான்கள் இருந்தாலும் எல்லோரையும் வெகு சுலபமாக டாமினேட் செய்து அனாயசமாக ஸ்கோர் செய்துவிடுவார் இந்த நடிப்பு ராட்சசன்.

பி.சுசீலா என்ற‌ழைக்க‌ப்ப‌டும் ஓர் குயில் பாடிய‌ பாட‌ல்க‌ளில் என்னுடைய‌ மோஸ்ட் ஃபேவ‌ரைட், 'உன்னை ஒன்று கேட்பேன்' & 'பார்த்த ஞாபகம் இல்லையோ'. 'பார்த்த‌ ஞாப‌க‌ம் இல்லையோ' பாட‌லில் சிவாஜி சிக‌ரெட் பிடிக்கும் காட்சியை பார்த்திருக்கிறீர்க‌ளா? செம்ம்ம‌ ஸ்டைல் அது!

தில்லு முல்லு

பொதுவாக கே.பாலச்சந்தர் படங்களை நான் விரும்பி பார்ப்ப‌தில்லை. சிக்கலான உறவுகள், உணர்வுகள், பிரச்னைகள்...ஐயையோ வேணாம்பா சாமி என்று ஒதுங்கிவிடுவேன். அடிப்ப‌டையில் fun-loving கேர‌க்ட‌ராக‌ இருப்ப‌தால் என‌க்கு இந்த‌ பட‌ம் பிடித்துபோன‌தில் ஆச்ச‌ரிய‌மில்லை. ப‌ட‌த்தின் டைட்டிலுக்கு முன்பு ர‌ஜினி கொடுக்கும் இன்ட்ரோ முத‌ல் க‌டைசி காட்சி வ‌ரை சிரித்துக்கொண்டே இருந்தேன். 'அய்ய‌ம்பேட்டே அறுவ‌டை ந‌ம்பி க‌லிய‌பெருமாள் ச‌ந்திர‌ன்' என்று ஆர‌ம்பிக்கும்போதும், எத‌ற்கெடுத்தாலும் 'சின்ன‌ வ‌ய‌சுல‌ எங்க‌ப்பா சொல்லிருக்கார் சார்' எனும்போதும் த‌லைவ‌ர் பின்னி எடுப்பார். 'காத‌லிக்க‌ நேர‌மில்லை'க்கு எப்ப‌டி நாகேஷ்‍‍-பாலையாவோ, அதுபோல் இப்ப‌ட‌த்திற்கு தேங்காய் சீனிவாச‌ன். இவ‌ரைப் ப‌ற்றி என்ன‌ சொல்வ‌தென்றே தெரிய‌வில்லை. ச‌ந்தித்த‌ ஒவ்வொரு ப‌ந்தையும் சிக்ஸ‌ராக‌ மாற்றிய‌ பேட்ஸ்மேனுக்கு ச‌ம‌ம் இவ‌ர்.

எப்பொழுதும் அழுது வ‌டியும் கேர‌க்ட‌ரிலேயே வ‌(ஜ‌)ல‌ம் வ‌ந்த‌ செள‌கார் ஜான‌கி காமெடியில் ஒரு க‌ல‌க்கு க‌ல‌க்கியிருப்பார். மாத‌வி...........ஹும்ம்ம்...;)

இந்த‌ ப‌ட‌த்தில் என‌க்கு மிக‌வும் பிடித்த‌ வ‌ச‌ன‌ங்க‌ள்...

நாகேஷ் அடிக்க‌டி சொல்வார் "அதான் நாகேஷ்!"

ர‌ஜினி பூர்ண‌ம் விஸ்வ‌நாத‌னிட‌ம் சொல்வார் "என்னைக் க‌ண்டா எல்லார்க்கும் புடிக்கும்" :)

சிங்கார‌வேல‌ன்

ப‌ல‌ரின் லிஸ்ட்டில் இந்த‌ ப‌ட‌ம் இட‌ம்பெறாது என்றே நினைக்கிறேன். ஆனால் என‌க்கு பிடித்த‌திற்கான‌ கார‌ண‌ம்...வேறென்ன‌ காமெடிதான் :) வ‌டிவேல், ம‌னோ, சார்லி ஆகியோர் இருந்தாலும் க‌ம‌லும் க‌வுண்ட‌ம‌ணியும்தான் மென் ஆஃப் த‌ மேட்ச்.

'யாரும்மா அந்த மூணு பேர்?' என்று கேட்கும் க‌ம‌லை, அவ‌ர் அம்மா 'ரெண்டாம் ஆட்ட‌த்துக்கு சினிமா போகும்போதே நினைச்சேன் இப்ப‌டித்தான் ஆகும்னு' என்று த‌மிழ் சினிமாவை கிண்ட‌ல‌டித்துக்கொண்டே ஆர‌ம்பிக்கும் காட்சி, க‌ருவாட்டு கூடையுட‌ன் வ‌ரும் க‌ம‌லிட‌ம் ஆட்டோ ஓட்டுன‌ர் ப‌டும் அவ‌ஸ்தை, ம‌னோ, க‌வுண்ட‌ம‌ணி & கோ 'சிங்காஆஆஆர‌வேல‌ன், சிங்கார‌வேல‌ன்' என்று க‌ம‌லை குஷ்புக்கு அறிமுக‌ப்ப‌டுத்தும் காட்சி, 'வ‌ர‌மாட்டா சும‌தி..த‌ர‌மாட்டா அமைதி..வ‌ர‌ப்போறோம் நாங்க‌..த‌ர‌ப்போறோம் வீங்க‌' என்று க‌விதையுட‌ன்(!) ஆர‌ம்பிக்கும் ச‌ண்டைக்காட்சி, 'இப்ப‌ என்னடா ப‌ண்ற‌து?..ஒண்ணு ப‌ண்ணுவோம், இன்ட‌ர்வெல் விட்ருவோம்' என்று இடைவேளைக்கு முன் வ‌ரும் காட்சி....100% காமெடிக்கு இப்ப‌ட‌ம் உத்த‌ர‌வாத‌ம். சாதார‌ண‌ ம‌சாலா ஹீரோ ப‌ண்ண‌வேண்டிய‌ க‌தாபாத்திர‌த்தை க‌ம‌ல் செய்த‌தால் இப்ப‌ட‌ம் எல்லோருக்கும் பிடிக்குமா என்று தெரிய‌வில்லை, ப‌ட் ஐ லைக் இட்!

காத‌லுக்கு ம‌ரியாதை

விஜ‌ய் நடித்து நான் மிக‌வும் ர‌சித்த‌ ப‌ட‌ம் இது. இதே‌ விஜ‌ய் தொட‌ர்ந்திருந்தால் இன்று ப‌ல‌ரும் விரும்பும் ந‌டிக‌ராக‌ மாறியிருப்பார். தேவையில்லாம‌ல் ட்ராக் மாறி, இன்று எஸ்எம்எஸ், ஃபார்வார்ட் ஈமெயில்க‌ளின் காமெடி பீஸாக‌ மாறி அவ‌ஸ்தைப‌ட்டுக்கொண்டிருக்கிறார். 'அய்ய‌! பேபி ஷாலினியா, ஓவ‌ர் அல‌ட்ட‌ல்பா' என்று இருந்த‌ எண்ண‌த்தை, வெகு அனாய‌ச‌மாக‌ இந்த‌ ஒரே ப‌ட‌த்திலேயே மாற்றினார் 'பூ விழி பார்வையில் மின்ன‌ல் காட்டிய‌' ஷாலினி. காத‌ல‌ர்க‌ளுக்கான‌ தேசிய‌ கீத‌மாக‌ 'என்னைத் தாலாட்ட‌ வ‌ருவாளோ'வை ப‌டைத்தார் இளைய‌ராஜா. இதுபோன்ற‌ ஒரு சூப்ப‌ர்ஹிட் பாட‌லுக்கு பின்பும் ஏன் ப‌ழ‌னிபார‌தியால் முண்ண‌ணி இட‌த்துக்கு வ‌ர‌முடிய‌வில்லை என்ப‌து இன்னும் என‌க்கு புதிர்தான்!

ப‌க்க‌ம் ப‌க்க‌மாக‌ வ‌ச‌ன‌ம் பேசி முடிக்க‌ வேண்டிய‌ க்ளைமேக்ஸை, ஸ்ரீவித்யாவின் க‌ண்க‌ளும், ஷாலினியின் க‌ண்க‌ளுமே பேசி எளிதாக‌ ந‌ம்மை ஈர்த்துவிடும். குறிப்பாக‌ ஸ்ரீவித்யா...இவ‌ர் ந‌டிப்பை பார்த்து அச‌ந்து போனேன்!

விஜ‌ய் ர‌சிக‌ர்க‌ளுக்காக‌ ஒரு பி.கு.: விஜ‌ய் ந‌டித்த‌ ஃபார்முலா ப‌ட‌ங்க‌ளில் கில்லி பிடித்திருந்த‌து. கார‌ண‌ம் ஹீரோயிஸ‌ம் இருந்தாலும் ஒரு அண்ட‌ர்ப்ளே இருந்த‌து. போக்கிரியும் பிடித்திருந்த‌து..பெல் பாட்ட‌ம் போட்ட‌ போலீஸாக‌ வ‌ரும் காட்சிக்கு முன்பு வ‌ரை. ஆனால் ஆதி, அழ‌கிய‌ த‌மிழ் ம‌க‌ன், குருவி, வில்லு, வேட்டைக்கார‌ன்....என்ன‌ இதெல்லாம்? கொஞ்ச‌ம் பாத்து செய்ய‌ சொல்லுங்க‌ பாஸ் :)

த‌ள‌ப‌தி

'நாய‌க‌ன்' பிடிக்கும்தான். ஆனால் அதில் The Godfatherரிஸ‌ம் நிறைய‌ இருந்த‌தால், இந்த‌ லிஸ்ட்டில் குறிப்பிட‌வில்லை. இதுவும் ந‌ம் எல்லோர்க்கும் தெரிந்த‌ ம‌ஹாபார‌த‌க் க‌தைதான். ஆனால் ப‌ட‌மாக்கிய‌ வித‌த்தில் அச‌த்தியிருப்பார் ம‌ணிர‌த்ன‌ம். வெறும் ஆக்ஷ‌ன், ஸ்டைல், காமெடி என்றே ம‌ன‌தில் ப‌திந்திருந்த‌ சூப்ப‌ர் ஸ்டாரை, 'சின்ன‌த்தாய‌வ‌ள்' பாட்டின் மூல‌ம் ந‌ல்ல‌ 'ந‌டிக‌ராக‌'வும் காட்டினார். எப்போது அந்த‌ பாட‌லை பார்த்தாலும் உட‌ல் சிலிர்க்கும் என‌க்கு. இப்பாட‌லைப் ப‌ற்றி பேசுகையில், மீண்டும் ஸ்ரீவித்யா...இதை எழுதும்போதுதான் தோன்றுகிற‌து, ஒரு மிக‌ச்சிற‌ந்த‌ ந‌டிகையை வெகு சீக்கிர‌ம் இழ‌ந்துவிட்டோம் என்று :(

இன்று இருக்கும் துக்க‌டா ஹீரோக்க‌ளே ட‌புள் ஹீரோ ச‌ப்ஜெக்ட் செய்ய‌ த‌ய‌ங்கும்போது, இரு பெரும் சூப்ப‌ர் ஸ்டார்க‌ள் இணைந்து ந‌டித்த‌து மிக‌ப் பெரிய‌ விஷ‌ய‌ம்தான். இருவ‌ருக்கும் ச‌ம‌மான‌ கேர‌க்ட‌ர்க‌ள் கொடுத்து, ஜ‌ஸ்டிஃபை செய்த‌து ம‌ணி சாரின் டேல‌ன்ட். இப்ப‌ட‌த்தை தியேட்ட‌ரில், டிவியில், டிவிடியில் என்று ப‌ல‌ முறை பார்த்திருக்கிறேன். எத்த‌னை முறை என்ப‌து ச‌த்திய‌மாக‌ நினைவில் இல்லை.

'ஏன்?'

'தேவா'

அவ்வ‌ள‌வுதான். சொல்ல‌ நினைத்த‌தை வ‌ள‌வ‌ள‌வென்று சொல்லாம‌ல், ப‌ட‌ம் பார்ப்ப‌வ‌ர்க‌ள் புத்திசாலிக‌ள்தான், அவ‌ர்க‌ளால் புரிந்து கொள்ள‌ முடியுமென்று ஷார்ட்டாக‌ முடித்தார்.

ப‌ட‌த்தில் என‌க்கு மிக‌வும் பிடித்த‌ காட்சி....'நிறுத்த‌ணும், எல்லாத்தையும் நிறுத்த‌ணும்' என்று வ‌ரும் ர‌ஜினி-ம‌ம்முட்டி-அர்விந்த் சுவாமி காட்சி. பிண்ண‌ணி இசையில் இளைய‌ராஜா அடி பின்னியெடுத்திருப்பார் இந்த‌ காட்சியில்!

அன்பே சிவ‌ம்

க‌ம‌ல் மேல் ம‌ரியாதை உண்டாக்கிய‌ ப‌ட‌ம் என்று கூட‌ சொல்வேன். அதுவ‌ரை 'அவ‌ன் இவ‌ன்' என்றே ஒருமையில் குறிப்பிட்டுக்கொண்டிருந்த‌வ‌ன், இப்ப‌ட‌த்திற்கு பின்புதான் க‌ம‌ல் ப‌ற்றி பேசும்போது, 'அவ‌ர்ர்ர்ர், இவ‌ர்ர்ர்ர்' என்று குறிப்பிடுகிறேன். விட்டால் 'க‌ம‌ல்ஹாச‌ர்' என்று கூட‌ சொல்வேன்.:)

எப்போதும் த‌ன்னுட‌ன் இன்னொரு ஹீரோ ந‌டித்தால் அவ‌ரை டாமினேட் செய்து ந‌டித்தே ப‌ழ‌க்க‌ப்ப‌ட்ட‌ க‌ம‌ல், இதில் மாத‌வ‌னை த‌ன்னைவிட‌ ஒருப‌டி மேலேயே தூக்கிவைத்தார். மேடியும் லேசுப்ப‌ட்ட ஆளா என்ன‌, கிடைத்த‌ பூந்தியை அழ‌காக‌ ப‌ய‌ன்ப‌டுத்தி ல‌ட்டாக‌ கொண்டுவ‌ந்தார். ர‌யில் விப‌த்தில் சிக்கிய‌ சிறுவ‌னுக்கு ர‌த்த‌ம் கொடுத்தும் காப்பாற்ற‌ முடியாம‌ல் இற‌ந்துவிட‌, அத‌ன்பின் அதை நினைத்து குமுறும் காட்சியில் மாத‌வ‌னை பார்த்து விய‌ந்துபோனேன்.

டைட்டிலில் 'இய‌க்க‌ம் சுந்த‌ர் சி.' என்று காண்பித்த‌து ர‌சிக்க‌த்த‌க்க‌ ஒன்று ;). மேலும் ர‌சிக்க‌ வைத்த‌து ம‌த‌னுடைய‌ காமெடியும், புத்திசாலித்த‌ன‌மும் க‌ல‌ந்த‌ வ‌ச‌ன‌ங்க‌ள்...குறிப்பாக‌ '2:02 டூ 2:22' ;)

இருவ‌ர்

இன்னும் 10 வ‌ருட‌ங்க‌ளாவ‌து க‌ழித்து வ‌ந்திருக்க‌வேண்டிய‌ ப‌ட‌ம். இரு பிர‌ப‌ல‌ங்க‌ளைப் ப‌ற்றிய‌ பட‌ம் எடுப்ப‌து எவ்வ‌ள‌வு ரிஸ்க்! ஒரே ஒரு காட்சியில் பிச‌கினாலும், 'ஹே டைர‌க்ட‌ர் அவ‌ருக்கு ச‌ப்போர்ட் ப‌ண்றாருப்பா' என்ற‌ பேச்சு எழுந்து, ப‌ட‌ம் பார்த்து முடித்த‌ பின்னும் அதுதான் ம‌ன‌தில் நிலைத்திருக்கும். ஆனால் அதுபோல் ஒரு காட்சியிலும் ச‌றுக்காம‌ல், ஆர‌ம்ப‌ம் முத‌ல் இறுதி வ‌ரை 'இது ம‌ணிர‌த்ன‌ம் ப‌ட‌ம்' என்ப‌தை நிரூபித்திருப்பார்.

ப‌ள்ளியில் ப‌டித்துக்கொண்டிருந்த‌போது ரிலீஸான‌து. ஆனால் அப்போது 'போடா இதெல்லாம் போர‌டிக்கும்டா' என்று சொல்லி, ப‌ட‌த்தை பார்க்காம‌ல் விட்டுவிட்டேன். ஆனால் மூன்று வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பு 'ச‌ரி இந்த‌ ப‌ட‌த்துல‌ அப்ப‌டி என்ன‌தான் இருக்குன்னு பாத்துட‌லாமே' என்று டிவிடி வாங்கி பார்த்தேன். பார்த்த‌பின் என் ந‌ண்ப‌ர் ஹ‌ரீஷிட‌ம் சொன்னேன், "இந்த‌ மாதிரி ஒரு ப‌ட‌த்துல‌ வொர்க் ப‌ண்ணிட்டு செத்துபோயிட‌ணும் ஹ‌ரீஷ்". ஞாப‌க‌ம் இருக்கா டைர‌க்ட‌ர்?...:)

நான் ர‌சித்த‌ சில....

'ஆயிர‌த்தில் நான் ஒருவ‌ன்' பாட‌ல் - 'எம்ஜிஆர்'ரிஸ‌ம் துளியும் குறையாத‌ பாட‌ல்.

'ந‌றுமுகையே ந‌றுமுகையே' பாட‌ல் - வார்த்தைக‌ளில் விளையாடியிருப்பார் க‌விஞ‌ர்.

ஜெய‌ல‌லிதாவை மிக‌ச்சிற‌ப்பாக‌ portray செய்திருந்தார்‌ ஐஸ்வ‌ர்யா ராய். ஜெய‌ல‌லிதா பார்த்திருந்தால் க‌ண்டிப்பாக‌ ர‌சித்திருப்பார்.

ஜீப்பிலிருந்து கீழே விழுந்த‌பின், ஐஸ்வ‌ர்யா ராயும் மோக‌ன்லாலும் நெருக்க‌மாக‌ நின்று கொண்டு ஒருவ‌ரையொருவ‌ர் பார்த்துகொண்டிருப்பார்க‌ள். அப்போது ஒரு ரொமான்டிக்கான‌ பிஜிஎம் வ‌ரும்......ர‌ஹ்மான் கி 'ஜெய் ஹோ'!

பிர‌காஷ்ராஜ் கூட்ட‌த்தில் பேசிக்கொண்டிருக்கும்போது, வேண்டுமென்றே தாம‌த‌மாக‌ சென்று கூட்ட‌த்தின‌ரை த‌ன் ப‌க்க‌ம் ஈர்ப்பார் மோக‌ன்லால். அப்போது பிர‌காஷ்ராஜ் ஒரு ரியாக்ஷ‌ன் கொடுப்பார்...இந்த‌ ம‌னித‌ருக்கு தேசிய‌ விருது கொடுத்த‌தில் த‌ப்பேயில்லை!

'உட‌ல் ம‌ண்ணுக்கு உயிர் த‌மிழுக்கு, இதை உர‌க்க‌ச் சொல்வோம் உல‌குக்கு' என்று அர்விந்த் சுவாமியின் குர‌லில் வ‌ரும் க‌விதை

'சாவிலும் எனை முந்திக்கொண்டு ச‌ரித்திர‌ம் ப‌டைத்த‌வ‌னே' என்று பிர‌காஷ்ராஜ் இறுதிக்காட்சியில் சொல்லும் க‌விதை

காக்க‌ காக்க‌

1980, 90க‌ளில் வ‌ந்த‌ ப‌ட‌ங்க‌ளை பார்த்தால், போலீஸாக‌ வ‌ருப‌வ‌ர் அர‌சிய‌ல்வாதிக்கு கூஜா தூக்குப‌வ‌ராக‌ வ‌ருவார், க‌ண்டிப்பாக‌ சிறையில் ஒரு அப்பாவி பெண்ணை ப‌லாத்கார‌ம் செய்வார். அப்ப‌டியே ந‌ல்ல‌ போலீஸாக‌ இருந்தாலும், ஹீரோ ந‌ன்றாக‌ ச‌ண்டை போட்டு முடித்த‌பின், க்ளைமேக்ஸில் வ‌ந்து வான‌த்தை நோக்கி துப்பாக்கியால் ஒருமுறை சுட்டு, 'யூ ஆர் அண்ட‌ர் அரெஸ்ட்' என்பார். இல்லையென்றால், ஹீரோவை நோக்கி வில்ல‌ன் சுடும்போது குறுக்கே பாய்ந்து குண்டை தாங்கிக்கொள்வார். அப்ப‌டியும் ஹீரோவின் தோளில் சாய்ந்துகொண்டு, "என்னை ப‌த்தி க‌வ‌லைப்ப‌டாதே, போ, போய் அவ‌னைத் த‌டுத்து ந‌ம்ம‌ நாட்டை காப்பாத்து, உன்னால‌தான் அது முடியும்...போ போ" என்று ஓவ‌ர் சீன் ஒய்யாக்குமாராக‌ ந‌ம்மை க‌ண்ணீரில் ஆழ்த்துவார்.

உங்க‌ளுக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். சென்னை போலீஸார் வீர‌‌ம‌ணியை என்க‌வுன்ட‌ர் செய்த‌ கொஞ்ச‌ நாளில் ரிலீஸான‌து இப்ப‌ட‌ம்.

'ஆ' 'ஊ' என்று க‌த்தாம‌ல், ப‌ஞ்ச் டய‌லாக் விடாம‌ல், ஒரு அமைதியான‌ போலீஸாக‌ வாழ்ந்திருந்தார் சூர்யா. இந்த‌ கெமிஸ்ட்ரி, கெமிஸ்ட்ரி என்கிறார்க‌ளே, அதை நான் +1, +2வில் ப‌டித்த‌தைவிட‌ இந்த‌ ப‌ட‌த்தில்தான் சூர்யா ஜோதிகாவை பார்த்து க‌ற்றுக்கொண்டேன். நாய‌க‌னே க‌தையை ந‌ரேட் செய்வ‌து போல் இருந்த‌து ரிய‌லி வொண்ட‌ர்ஃபுல், அதுவும் சூர்யா வாய்ஸ் எக்ஸ‌ல‌ண்ட்! உண‌மையாக‌ சொல்கிறேன், இந்த‌ ப‌ட‌த்தை பார்த்து முடித்த‌பின் போலீஸ் மேல் ஒரு ம‌ரியாதையே வ‌ந்திருந்த‌து என‌க்கு. ச‌த்ய‌ம் போன‌ற‌ குவாலிட்டியான‌ திரைய‌ர‌ங்கில் இப்போது ரீ‍ரிலீஸ் செய்தாலும் க‌ண்டிப்பாக‌ பார்ப்பேன்.

ர‌சித்த‌ வ‌ச‌ன‌ங்க‌ள்...

'பொண்ணுங்க‌ விஷ‌ய‌த்துல‌ நான் பெரிய‌ எக்ஸ்ப‌ர்ட்லாம் கிடையாது, ஆனா ஒரு பொண்ணுன்னா இப்ப‌டித்தான் இருக்க‌ணும்னு தோணுச்சு'.


************

'உன‌க்கும் என‌க்கும் ஆறு வ‌ய‌சு வித்தியாச‌ம் இருக்கு, ஒய் மீ?'

'இட்ஸ் எ கேர்ள் திங், ஒரு பொண்ணா இருந்து பாருங்க‌, அப்போதான் உங்க‌ளுக்கு புரியும்'

இந்த‌ காட்சியில் சூர்யா ஜோதிகாவின் ந‌டிப்பு.......அவ‌ர்க‌ள் ந‌டித்தார்க‌ளா என்ன‌?...;)





த‌சாவ‌தார‌ம்

இதுல‌ என்ன‌ க‌தை இருக்கு, சில‌ கேர‌க்ட‌ர்ஸ்லாம் தேவையே இல்லாம‌ திணிக்க‌ப்ப‌ட்டிருந்த‌து என்றெல்லாம் விம‌ர்ச‌ன‌ம் செய்ப‌வ‌ர்க‌ள் ஒரே ஒரு முறை யோசித்து சொல்ல‌ட்டும். இதே ப‌ட‌த்தை ஹாலிவுட்டில், ஹாரிஸ‌ன் ஃபோர்ட், ப்ரூஸ் வில்லிஸ், டாம் க்ரூஸ் போன்ற‌ ஹீரோக்க‌ள் செய்திருந்தால் என்ன‌ சொல்லியிருப்பார்க‌ள். 'வாவ், என்ன‌மா பின்றான் தெரியுமா? க‌ம‌ல்லாம் பிச்சை எடுக்க‌ணும் அவ‌ன்கிட்ட‌', 'ஹாலிவுட்னா ஹாலிவுட்தான்டா, ந‌ம்மாளுங்க‌ளுக்கு ம‌ர‌த்தையும், ஹீரோயினையும் சுத்தி சுத்தி பாட்டு பாட‌த்தான் தெரியும்'...இப்ப‌டி ப‌ல‌.

ப‌த்து கேர‌க்ட‌ர்க‌ள், மேக்க‌ப்பை விடுங்க‌ள், இருக்கிற‌ டெக்னால‌ஜியை வைத்து எப்ப‌டியாவ‌து ப‌ண்ணிவிட‌லாம். ஆனால் ப‌த்து வித‌மான‌ குர‌ல்க‌ள்...முடியுமா? எந்த‌ ந‌டிக‌ர் செய்திருக்கிறார் இப்ப‌டி?

எல்லோரையும் பாடுப‌டுத்திய‌ சுனாமியையே பாஸிட்டிவ்வாக‌ பார்த்து, ஒரு த்ரில்லான‌ சேஸிங்கை கொடுத்திருந்தார் க‌ம‌ல். ஆனால் அதையும் ஓவ‌ராக‌ விம‌ர்ச‌ன‌ம் செய்த‌ அறிவு ஜீவிக‌ள் நிறைய‌வே இருந்த‌ன‌ர்.

கே.எஸ்.ர‌விக்குமார் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். 'ப‌ட‌ம் ஆர‌ம்பிக்க‌ற‌துக்கு முன்னாடி, நிறைய‌ மேக்க‌ப் டெஸ்ட் ப‌ண்ண‌ப்போ, சார் ரொம்ப‌ கஷ்ட‌மாயிருக்கே, விட்ற‌லாமான்னு அவ‌ர்கிட்ட‌ கேட்டேன்'.

அத‌ற்கு க‌ம‌ல் சொன்னாராம் 'க‌ஷ்ட‌ப்ப‌டாம‌ ப‌ண்ண‌னும்னா நான் எதுக்கு?'

**********

ஏற்க‌ன‌வே ஒரு தொட‌ர் ப‌திவுக்கு சில‌ ந‌ண்ப‌ர்க‌ளை அழைத்துள்ள‌தால், இத்தொட‌ரைத் தொட‌ர‌ ந‌ண்ப‌ர் ஹ‌ரீஷை ம‌ட்டும் அழைக்கிறேன். 'ய‌ம்மாடி க்ரேட் எஸ்கேப்பு' என்று ம‌ற்ற‌வ‌ர்க‌ள் ம‌கிழ்ச்சிய‌டைய‌ வேண்டாம். அடுத்த‌ தொட‌ர் ப‌திவு ஒன்று இருக்கிற‌து, மாட்டி விடுறேன் இருங்க‌ ;))


27 comments:

  1. hey
    hey
    hey

    am the first..

    am the first...

    am the first....

    varutha padtha vaasippor sangam
    complan surya

    ReplyDelete
  2. ர‌சித்த‌ வ‌ச‌ன‌ங்க‌ள்...me too....

    'பொண்ணுங்க‌ விஷ‌ய‌த்துல‌ நான் பெரிய‌ எக்ஸ்ப‌ர்ட்லாம் கிடையாது, ஆனா ஒரு பொண்ணுன்னா இப்ப‌டித்தான் இருக்க‌ணும்னு தோணுச்சு'........complan surya valimolikiren...



    'ஏன்?'

    'தேவா'---enimey nan சூர்யா..neenga தேவா..deal okya...

    ரகு சாரி தேவா

    சூப்பரா இருக்கு
    ஒரு ஒரு நடிகர் பத்தி மட்டும் சொல்லாம அதில் உள்ள
    வசனங்களையும் குறிப்பிட்டு
    பதிவு பண்ணி இருக்கீங்க.
    மிகவும் ரசித்தேன்.

    நன்றி வாழ்க வளமுடன்
    வருத்தபடாத வசிப்போர் சங்கத் தளபதி
    காம்ப்ளான் சூர்யா

    ReplyDelete
  3. அடேங்கப்பா!!! வசனங்கள் முதற்கொண்டு
    மறக்காமல் பகிர்ந்து உள்ளீர்களே!!
    நன்றி ரகு.

    ReplyDelete
  4. லிஸ்டில் சில படங்கள் என்னுடைய பேவரிட்டும்..

    ReplyDelete
  5. ம்ம்..டேஸ்ட் ஒத்துப் போகுது.

    சுந்தர்.சி.இப்போருக்குற நிலைமையப் பார்த்தா அவரா அன்பே சிவம் எடுத்தாருன்னு எனக்கும் தோணுதுண்ணே.!

    தளபதி அப்போ பிரிஞ்ச தேவாவும் சூர்யாவும் இன்னும் சேரவேயில்லை..எந்த கலிவரதன் பிரிச்சானோ. சேரனும்.

    ReplyDelete
  6. // ஆதி, அழ‌கிய‌ த‌மிழ் ம‌க‌ன், குருவி, வில்லு, வேட்டைக்கார‌ன்// அடேங்கப்பா.. இத்தனை படம் பார்த்து இருக்கீங்களா..

    ReplyDelete
  7. இருவர் உங்கள் லிஸ்ட்டில் இருப்பது மகிழ்ச்சி. என்னைப்பொறுத்தவரை சிறந்த படம் என்று ‘அன்பே சிவம்’ படத்தை சொன்னாலும், சிறந்த இயக்கம் ‘இருவர்’ தான்.

    ReplyDelete
  8. அழகான ,அளவான விமர்சனம்.

    ReplyDelete
  9. பிடித்த படங்களை ரொம்ப சிம்பிளா அழகா எழுதியிருக்கிங்க ரகு!
    உங்க லிஸ்ட்ல எனக்கும் பிடிச்ச படம் ரெண்டு இருக்கு... முதலும் ஐந்தாவதும்!

    ReplyDelete
  10. அருமையான இயல்பான ஆர்ப்பாட்டமில்லாத தேர்வுகள் ரகு!
    நண்பர் சைவகொத்துப்பரோட்டா சொன்ன மாதிரி
    //அடேங்கப்பா!!! வசனங்கள் முதற்கொண்டு மறக்காமல் பகிர்ந்து உள்ளீர்களே!!//
    இது சாதாரண விஷயமில்ல ரகு..! சினிமாவை எடுக்கிறது ஒரு 'கலை'ன்னா, அதை ரசிக்கிறது ஒரு சுகமான கலை... அதை திறம்பட செய்துக்கொண்டிருக்கும் உங்களுக்கு விருந்தாக இன்னும் நிறைய திரைப்படங்கள் வெளிவரவேண்டும் என்று அன்புடன் ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன். சினிமா மேல நீங்க வச்சிருக்கிற காதல்தான் உங்களை இந்தளவுக்கு படத்தை உன்னிப்பா பார்த்து ரசிக்க வச்சிருக்கு..! நீங்க பார்த்து ரசிச்ச நாயகர்களுக்கு 'நடிப்பு ராட்சர்' 'கமல்ஹாசர்'னு செல்லமா கூப்பிட்டு அன்பான அடைமொழிகள் கொடுத்திருப்பது நல்ல ரசனை!
    சூப்பரான இந்த தலைப்பைத் தொடர என்னையும் அழைத்தமைக்கு மிக்க நன்றி! சீக்கிரமே எழுதுறேன்!

    -
    DREAMER

    ReplyDelete
  11. ந‌ன்றி சூர்யா, எதுக்கு தேவா? க‌டைசில‌ போட்டு த‌ள்ளுற‌துக்கா? நான் ர‌குவாக‌வே இருந்துட்டு போறேன் ;))

    ந‌ன்றி சைவ‌கொத்துப்ப‌ரோட்டா, புடிச்ச்ச்ச‌ ப‌ட‌ங்க‌ள்...அதான் இப்ப‌டி :)

    ReplyDelete
  12. ந‌ன்றி வித்யா, ஓர‌ள‌வுக்கு கெஸ் ப‌ண்ண‌முடியுது :)

    நன்றி ராஜு, அவ‌ர் இய‌க்கிய‌ ம‌த்த‌ ப‌ட‌ங்க‌ளை யோசிச்சு பாருங்க‌ண்ணே, உங்க‌ ட‌வுட் க‌ன்ஃப‌ர்ம் ஆயிடும் ;))

    ReplyDelete
  13. ந‌ன்றி அமைச்ச‌ரே :)

    ந‌ன்றி ஜெய், அழ‌கிய‌ த‌மிழ் ம‌க‌னும், குருவியும் ந‌ண்ப‌ர்க‌ளோட‌ வ‌ற்புறுத்த‌லுக்காக‌ போன‌து. வேட்டைக்கார‌ன் ம‌ட்டும் நானே விரும்பி/ந‌ம்பி போனேன்...ஆனா......சரி விடுங்க‌....ஆதி, வில்லு ப‌ட‌ங்க‌ளோட‌ சில‌ காட்சிக‌ளை டிவியில் பார்த்த‌தோட‌ ச‌ரி...அதுக்கே...:))

    என்னைப் பொறுத்த‌வ‌ரை 'இருவ‌ர்' ஓன் ஆஃப் த‌ பெஸ்ட் இன் த‌மிழ் சினிமா!

    ReplyDelete
  14. ந‌ன்றி இர‌சிகை :)

    ந‌ன்றி சாருஸ்ரீராஜ் :)

    ReplyDelete
  15. ந‌ன்றி மால்குடி :)

    ந‌ன்றி ப்ரியா, உங்க‌ளுக்கு பிடிச்ச‌ ஏரியாவாச்சே ;)

    ReplyDelete
  16. ந‌ன்றி ஹ‌ரீஷ், நீங்க‌ சொல்ற‌து உண்மைதான். ந‌டிப்பாலும், திரைக்க‌தையாலும், இய‌க்க‌த்தாலும், இசையாலும் சில‌ ப‌ட‌ங்க‌ள் ஈர்த்துவிடுகின்ற‌ன‌. குறிப்பாக‌ 'காக்க‌ காக்க‌'...இப்ப‌டி கூட‌ ஒரு போலீஸ் ப‌ட‌ம் எடுக்க‌முடியுமா என்று அச‌ந்துபோனேன். பிடித்த‌வை நிறைய‌ இருக்கு ஹ‌ரீஷ், ப‌த்துன்னு சொன்ன‌தால‌ அதோட‌ போதும்னு விட்டுட்டேன். இன்னும் கூட‌ 10, 15 ப‌ட‌ம் இருக்கு லிஸ்ட்ல‌...உங்க‌ லிஸ்ட்டை ஆர்வ‌த்தோட‌ எதிர்பார்த்துட்டிருக்கேன், சீக்கிர‌ம் எழுதுங்க‌ :)

    ReplyDelete
  17. நீங்க யாரோட ரசிகர்னு புரிஞ்சுக்கவே முடியலையே? உங்க வயசுக்கு முதல் சில படங்கள் சொன்னது ஆச்சரியமா இருக்கு.

    ReplyDelete
  18. //தில்லு முல்லு// .இப்போது அல்ல எப்போதும் எனக்கும் பேவரிட் தான்

    ReplyDelete
  19. ந‌ன்றி மோக‌ன், 'எதிர் நீச்ச‌ல்', 'ச‌ர்வ‌ர் சுந்த‌ர‌ம்'கூட‌ பிடிக்கும். லிஸ்ட்ல‌ 10 ப‌ட‌ங்க‌ள்னு சொன்ன‌தால‌ அதையெல்லாம் சேர்க்க‌ முடிய‌ல‌ :(

    ந‌ன்றி மின்ன‌ல், உங்க‌ளுக்குமா...சூப்ப‌ர் :)

    ReplyDelete
  20. ந‌ன்றி சூர்யா, எதுக்கு தேவா? க‌டைசில‌ போட்டு த‌ள்ளுற‌துக்கா? நான் ர‌குவாக‌வே இருந்துட்டு போறேன் ;))
    ---no no

    surya erukken ungala kaapthiduven..)))

    ReplyDelete
  21. பாஸ், புதிய பறவையில் என் ஃபேவரிட் சிட்டுகுருவி முத்தம் கொடுத்து. அந்தப் ப்டம் என்னை அவ்வளவாக கவரவில்லை. ஆனால் எல்லா பாட்டுமே சூப்பர்..

    சிவாஜி அந்த காலக்கட்டத்தில் சிறந்த நடிகர்தான். ஆனால் அது நாடகத்தமனையாக தெரிகிறது. அவரின் மாஸ்டர்பீஸ் ஆக நான் நினைப்பது முதல் ம்ரியாதை. அவர் நடிப்பு நீர்வீழ்ச்சி மாதிரி. கதைக்கேற்ற மாதிரி கால்வாய் வெட்டி பாய வைக்க அந்தக் காலத்தில் இயக்குனர்கள் இல்லை என்பது என் கருத்து..

    தோ...பார்றா .. யார் ஃபேன் நடிப்ப பத்தி பேசறதுன்னு கமென்ட் வந்தாலும் வரும் சகா. ரிலீஸ் பண்ணாதிங்க :))

    ReplyDelete
  22. //.குறிப்பாக‌ '2:02 டூ 2:22' ;)//

    இது 1:58 டு 2:02 :))

    நல்ல பட்டியல் நண்பரே. என் பட்டியலிலும் இதிலுள்ள பல படங்கள் இடம்பெற்றுள்ளன.

    ReplyDelete
  23. அத‌ற்கு க‌ம‌ல் சொன்னாராம் 'க‌ஷ்ட‌ப்ப‌டாம‌ ப‌ண்ண‌னும்னா நான் எதுக்கு?'
    //
    //

    Superb! My fav movie.

    ReplyDelete