Tuesday, December 08, 2009

டிய‌ர் ப்ளூ க்ராஸ் - இது நியாய‌மா?


இது கொஞ்ச‌ நாள் முன்னாடி என் ஃப்ரெண்டுக்கு ந‌ட‌ந்த ஒரு அனுப‌வ‌ம். இத‌ ப‌த்தி எழுத‌ணும், எழுத‌ணும், எழுத‌ணும்னு நினைச்சு இன்னைக்குதான் எழுத‌றேன். ஏன்னா எதையும் பிளான் ப‌ண்ணி ப‌ண்ண‌ணும்னு சுவாமி ச‌ங்கிம‌ங்கியார் சொல்லியிருக்க‌றார் இல்லியா, அதான். என் ஃப்ரெண்டு....ஹும்..அவ‌ர் பேர் வேணாம், Mr.100னு வெச்சுக்க‌லாம் (கொஞ்ச‌ நாள் Mr.எக்ஸ் ரெஸ்ட் எடுக்க‌ட்டுமே). அதென்ன‌ 100ன்னா கேக்குறீங்க‌? கேப்பீங்க‌ கேப்பீங்க‌, ஜேம்ஸ் பாண்ட் 007ன்னு வெச்சுக்க‌லாம். ஏன் என் ஃப்ரெண்டு 100னு வெச்சுக்க‌கூடாதா? எல்லாரும் ரைட் சைடு கொஞ்ச‌மா த‌லைய‌ திருப்பி மேல‌ பாருங்க‌. இனி ஒரு கொசுவ‌த்தி...

அன்னைக்கு புடுங்க‌ வேண்டிய‌ ஆணிங்க‌ கொஞ்ச‌ம் க‌ம்மியா இருந்த‌தால‌, ரிலாக்ஸா, த‌ம் அடிக்க‌ற‌ ஃப்ரெண்டுக்கு க‌ம்பெனி குடுக்க‌லாம்னு Mr.100 ஆஃபிஸ் கீழே இருக்க‌ற‌ டீக்க‌டைக்கு போயிருக்க‌றார். அங்க‌ ஓர‌த்துல‌ ஒரு சின்ன‌ புறா க‌ழுத்துல‌ அடிப‌ட்டு ர‌த்த‌ம் வ‌ந்து வ‌லியால‌ துடிச்சிட்டிருந்த‌து. அத‌ யாரும் பாக்க‌லியா இல்ல‌ பாத்தும் பாக்காத‌ மாதிரி இருந்துட்டாங்க‌ளான்னு தெரிய‌ல். ஆனா Mr. 100 அத‌ பாத்த‌ உட‌னே வேள‌ச்சேரி மெயின் ரோட்ல‌ இருக்க‌ற‌ ப்ளூக்ராஸுக்கு (செக்போஸ்ட்கிட்ட‌யிருக்கு, இதுதான் கிண்டில‌யிருந்து ப‌க்க‌ம், இன்னொன்னு ஆழ்வார்ப்பேட்டைல‌ இருக்கு) போன் ப‌ண்ணியிருக்க‌றார். அங்க‌ ஃபோன் அட்டெண்ட் ப‌ண்ண‌வ‌ர் சொன்னார். அவ‌ர் சொன்ன‌ வார்த்தைக‌ளை அப்ப‌டியே இங்க‌ எழுத‌றேன். ரொம்ப‌வும் அசால்ட்டான‌ டோனில்...

"இப்போதைக்கு வ‌ந்து எடுத்துட்டு போக‌முடியாது. நீங்க‌ளே எடுத்துட்டு வ‌ந்துடுங்க‌"

ப்ளூக்ராஸுங்க‌ற‌து வில‌ங்கு, ப‌ற‌வைக‌ளுக்கான அமைப்புதானே? அங்க‌ வேலை செய்ய‌ற‌வ‌ரே இப்ப‌டி சொல்ற‌து ச‌ரியா? இப்போதைக்கு வ‌ர‌முடியாதுன்னா என்ன‌ அர்த்த‌ம்? அந்த‌ புறா இறந்த‌துக்க‌ப்புற‌ம் வ‌ந்து எடுத்துகிட்டு போய் முறையான‌ ச‌ட‌ங்குக‌ளோட‌ கொள்ளி வெப்பாரா, புதைப்பாரா இல்ல‌ அட‌க்க‌ம் ப‌ண்ணுவாரா? ஏன் அவ‌ருக்கு அங்க‌ ச‌ம்ப‌ள‌ம் ஒழுங்கா த‌ர்ற‌‌தில்லையா? ஒருவேளை உண்மையாவே அவ‌ர் அங்க‌ பிஸியா இருந்திருந்தா அத‌ சொல்லியிருக்க‌லாமே? ஏன் வேற‌ ஆளுங்க‌ளே இல்லியா? இப்ப‌டி ஏக‌ப்ப‌ட்ட‌ ?க‌ள்தான் ம‌ன‌சுல‌ தோணுது.

ஆனா அவ‌ர்தான் அப்ப‌டி சொல்லிட்டாரேன்னு விடாம‌, Mr.100ம் இன்னொரு ந‌ண்ப‌ரும்‌ ஆஃபிஸ்ல‌ இன்ஃபார்ம் ப‌ண்ணிட்டு ஆட்டோ (கிண்டி‌ ஒலிம்பியால‌ருந்து வேள‌ச்சேரி செக்போஸ்ட் போய்வ‌ர‌ ஆட்டோ டிரைவ‌ர் அப்-அண்ட்-ட‌வுண் 150 ரூபா கேட்டார்) அரேஞ்ச் ப‌ண்ணி அந்த‌ ப்ளூக்ராஸுக்கே எடுத்துட்டு போய் விட்டுட்டு வ‌ந்தாங்க‌.

கொஞ்ச‌ம் யோசிச்சு பாருங்க‌, அன்னைக்குன்னு பாத்து நிறைய‌ ஆணிங்க‌ இருந்திருந்து, "புறா அடிப‌ட்டிருக்கு, ப்ளூக்ராஸ் வ‌ரைக்கும் போக‌ணும்"னு சொல்லியிருந்தா க‌ண்டிப்பா ஆஃபிஸ்ல‌ ப‌ர்மிஷ‌ன் குடுத்துட்டிருக்க‌மாட்டாங்க‌. அவ‌ரும் போகமுடியாத‌ சூழ்நிலைல‌ மாட்டியிருப்பார். ந‌ல்ல‌வேளை அதிர்ஷ்ட‌வ‌ச‌மா அதுமாதிரி ந‌ட‌க்க‌ல‌. ப்ளூக்ராஸ்ல‌ இருக்க‌ற‌வ‌ங்க‌ளால‌ டைமுக்கு வ‌ர‌முடியாதுன்னா இதுமாதிரி உயிர்க‌ள‌ காப்பாத்த‌ணும்னா கால் ப‌ண்ணுங்க‌ன்னு ஏன் நிறைய‌ இட‌த்துல‌ விள‌ம்ப‌ர‌ம் ப‌ண்றாங்க‌.

சொன்னா எத்த‌னை பேரு ந‌ம்புவீங்க‌ன்னு தெரிய‌ல‌. கிண்டி ஒலிம்பியால‌ருந்து வேள‌ச்சேரி செக்போஸ்ட் அப்-அண்ட்-ட‌வுணுக்கு 150 ரூபா கேட்ட‌ ஆட்டோ டிரைவ‌ர், அந்த‌ புறாவை விட்டுட்டு வ‌ந்த‌துக்க‌ப்புற‌ம் 100 ரூபாயே போதும்னு சொல்லிட்டார். தின‌மும் due க‌ட்ட‌ வேண்டிய‌ நிலையில‌ இருக்க‌ற‌ ஒரு ஆட்டோ டிரைவ‌ருக்கு இருந்த‌ அந்த‌ ம‌ன‌சு, ம‌னிதாபிமான‌ம்...ப்ளூக்ராஸுல‌ ஃபோன் அட்டெண்ட் ப‌ண்ண‌வ‌ரோட‌ அல‌ட்சிய‌ம்...என்ன‌த்த‌ சொல்ற‌து, ஆட்டோகார‌ர்க‌ள் எல்லாரும் மோச‌மான‌வ‌ங்க‌ன்னு சொல்ல‌‌முடியாது. அதே மாதிரி ப்ளூக்ராஸ்ல‌ இருக்க‌ற‌வ‌ங்க‌ எல்லாரும் உயிரின் ம‌திப்பு தெரிஞ்ச‌வ‌ங்க‌ன்னும் சொல்ல‌‌முடியாது.

ப்ளீஸ் த‌ய‌வுசெஞ்சு புறாவுக்காக‌ல்லாம் ஒரு ப‌திவான்னு நென‌ச்சுடாதீங்க‌. அப்புற‌ம் அந்த‌ ப்ளூக்ராஸ் உத்த‌ம‌ருக்கும் ந‌மக்கும் ஒரு வித்தியாச‌மும் கிடையாது.

6 comments:

  1. ஏதோ காமெடியாதான் எழுதுவீங்கன்னு நினைச்சேன்... but simply superb.

    //ஜேம்ஸ் பாண்ட் 007ன்னு வெச்சுக்க‌லாம். ஏன் என் ஃப்ரெண்டு 100னு வெச்சுக்க‌கூடாதா?//........ பெயர் காரணம் வெரி நைஸ்!

    Mr.100க்கு என்னோட வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. ந‌ன்றி ப்ரியா

    Mr.100கிட்ட‌ உங்க‌ வாழ்த்துக்க‌ளை சொல்லிடுறேன்

    ReplyDelete
  3. ரகு,
    நீங்க சொல்ற Mr.100 யாரா இருப்பாருன்னு ஒரளவுக்கு கெஸ் பண்ண முடியுது.
    அவருக்கு என் வாழ்த்துக்கள்.

    //ப்ளீஸ் புறாவுக்கெல்லாம் ஒரு பதிவான்னு தயவு செஞ்சு நினைச்சுடாதீங்க//

    என்ன ரகு இப்படி சொல்லிட்டீங்க, அன்னிக்கு சிபி சக்கரவர்த்தி புறாவுக்கு பண்ண உதவி உங்களை மாதிரி யாரோ ஒருத்தர் ப்ளாக்ல (ப்ளாக் போல வேறு ஏதோ ஒரு ஊடகம்) எழுதினதாலதான் அது வரலாறுல இடம்பெற்றது. அது மட்டுமில்ல, சிபிச்சக்கரவர்த்திகள் வரலாறுல மட்டுமில்ல, ஒலிம்பியா டெக்பார்க்கிலும் இருப்பாங்க என்கிற விஷயம் உங்களோட இந்த பதிவு மூலமா நிரூபனம் ஆகியிருக்கு.

    வாழ்த்துக்கள் - இது உங்களுக்கு, இந்த விஷயத்தை மக்கள் கவனத்திற்கு கொண்டு வந்ததிற்கு.

    அன்புடன்
    ஹரீஷ் நாராயண்

    ReplyDelete
  4. work is worship

    ithu avangaluku theryala

    ReplyDelete
  5. //ஒரளவுக்கு கெஸ் பண்ண முடியுது//
    ந‌ன்றி ஹரீஷ், நீங்க‌ க‌ரெக்டா கெஸ் ப‌ண்ணியிருப்பீங்க‌, இருந்தாலும் கிசுகிசு பாணியில‌ சொல்ல‌ட்டா? வ‌ட‌மொழி எழுத்தில் முடியும் மூன்று எழுத்து பெய‌ர் உள்ள‌வ‌ர்...ஷ்ஷ்ஷ் யார்கிட்டேயும் சொல்லிடாதீங்க‌

    ReplyDelete
  6. //work is worship//

    வ‌ருகைக்கு ந‌ன்றி ஏஞ்ச‌ல்

    வேலையா இல்ல‌, ஒரு உயிர்னு கூட‌ அவ‌ங்க‌ ப‌ரிதாப‌ப்பட‌ல‌

    ReplyDelete