Thursday, October 29, 2009

டெர்ர‌ரா ஒரு எஸ்எம்எஸ்!போன‌ வார‌ம் ஒரு நாள் ராத்திரி 8:45க்கு என் ஃப்ரெண்டுகிட்ட‌யிருந்து நாலு empty எஸ்எம்எஸ் வ‌ந்தது. என்ன‌டா இவ‌ன் கால் ப‌ண்ணாம‌, emptyயா எஸ்எம்எஸ் அனுப்ப‌றானேன்னு என‌க்கு ஒரு ச‌ந்தேக‌ம். ச‌ரி நாம‌ளே கால் ப‌ண்ணுவோம்னு ப‌ண்ணா, ரிங் போகுது...போகுது...போய்கிட்டேயிருக்குது. அட்டெண்ட் ப‌ண்ண‌வேயில்ல‌. ச‌ரின்னு விட்டுட்டேன்.

கொஞ்சம் நேர‌ம் க‌ழிச்சு, என‌க்கு லேசா ப‌ய‌மும், ச‌ந்தேக‌மும் வ‌ர‌ ஆர‌ம்பிச்சுது. அவ‌னுக்கு ஏதாவ‌து ஆயிடுச்சோ...சே, ம‌னசுக்குள்ளே வேண்டிகிட்டேன், "பிள்ளையாரே, எந்த‌ த‌ப்பான‌ செய்தியும் என‌க்கு குடுத்துடாதே (ஏன் க‌ட‌வுளை எப்ப‌வும் ஒருமையிலேயே சொல்றோம்? இத‌ ப‌த்தியே ஒரு ப‌திவு எழுத‌லாம் போல‌..)"

ம‌ணி 10:30 ஆச்சு. இந்த‌ நேர‌ம் தூங்கிட்டிருப்பானோ? அப்புற‌ம் எதுக்கு நாலு வெத்து எஸ்எம்எஸ் அனுப்புனான்? வேணும்னே ந‌ம‌க்கு டெர‌ர் குடுக்குறானா? ம‌ன‌சு கேக்க‌ல‌, ம‌றுப‌டியும் கால் ப‌ண்ணேன். ஹுஹும், ரிங்தான் போய்கிட்டேயிருந்துது, சார் எடுக்க‌ற மாதிரியே தெரிய‌ல‌. ம‌றுப‌டியும் பிள்ளையாருக்கு ஒரு பெட்டிஷ‌ன், "ம‌றுப‌டியும் சொல்றேன், த‌ய‌வுசெய்து எந்த‌ த‌ப்பான‌ நியூஸும் என் காதுல‌ விழாம‌ நீதான் பாத்துக்க‌ணும்"

ம‌றுநாள் காலைல‌ 6:15. என்ன‌டா இவ‌ன் "வேட்டையாடு விளையாடு" ரேஞ்சுக்கு டைம் போட்டு, டைம் போட்டு டார்ச்ச‌ர் ப‌ண்றானேன்னு நீங்க‌ த‌ப்பா பீல் ப‌ண்ண‌க்கூடாது, ஓகேவா? "சித்தி"ய‌ல்ல‌ ம‌ட்டுமில்ல‌, "அர‌சி"ய‌ல்ல‌யும் இதெல்லாம் சாதார‌ண‌ம‌ப்பா...

அவ‌ன்கிட்ட‌யிருந்து கால் வ‌ந்த‌து ("கை" வ‌ர‌லியான்னுலாம் க‌டிக்காதீங்க‌).

"ஹ‌லோ, ன்ன‌டா, நைட் 10:30 ம‌ணிக்கு கால் ப‌ண்ணியிருக்க‌ற‌, ன்னாச்சு?"

"டேய் உங்கிட்ட‌யிருந்து நாலு empty எஸ்எம்எஸ் 8:45க்கு வ‌ந்துது. அத‌னால‌தான் கால் ப‌ண்ணேன், ஏன்டா எடுக்க‌ல‌?"

"மொபைல் சைல‌ண்ட்ல‌ போட்டுட்டேன், அத‌னால‌தான் கால் வ‌ந்த‌தே தெரிய‌ல‌"

"போடாங்ங்ங்ங்க, நான் என்ன‌மோ ஏதோன்னு ப‌ய‌ந்துட்டேன், ச‌ரி எதுக்கு emptyயா மெஸெஜ் அனுப்புன‌?"

"நான் எங்க‌டா அனுப்புனேன்?"

"டேய் நான் இன்னும் ஒரு மெஸெஜ‌ கூட‌ டெலிட் ப‌ண்ண‌ல‌, இந்த‌ வார‌ம் ஊருக்கு வ‌ரும்போது நீயே என் மொபைல பாரு"

"ச‌ரி வுட்றா, நைட் என் பைய‌ன் (5 வ‌ய‌சு) மொபைல‌ வெச்சு விளையாட்டிருந்தான், அவ‌ன் ஏதாவ‌து ப‌ட்ட‌ன‌ அமுக்கியிருப்பான், உன‌க்கு மெஸெஜ் வ‌ந்துருக்கும், இதெல்லாம் ஒரு மேட்ட‌ரா?"

அவ‌ன் சொன்ன‌த‌ கேட்ட‌தும் நான் அப்ப‌டியே "சாக்க்க்காயிட்டேன்"

தேவ‌ர் ம‌க‌ன் க்ளைமேக்ஸ்ல‌ க‌ம‌ல் பீல் ப‌ண்ண‌ ரேஞ்சுக்கு நானும் பீலிங்கோட‌ அவ‌ன்கிட்ட‌ சொன்னேன்.

"டேய் வேணாண்டா, போய் புள்ளைங்க‌ள‌ ப‌டிக்க‌ வைங்க‌டா, மொபைல்லாம் கைல‌ குடுக்காதீங்க‌டா, ஆ...ஆ..."

"அட‌ச்சே வெத்து மேட்ட‌ருக்கு ஓவ‌ரா சீன் போடாத‌, வீக்எண்ட் ஊருக்கு வ‌ந்தினா கால் ப‌ண்ணு, கால் ப‌ண்ண‌ல‌ன்னா, ம‌றுப‌டியும் எம் பைய‌ன்கிட்ட‌ மொபைல‌ குடுத்துடுவேன்"

"ங்ங்கொய்யாலே, அப்ப‌னும், புள்ளையும் வெளையாட‌ற‌தா இருந்தா பொம்மைய‌ வெச்சு வெளையாடுங்க‌டா, எதுக்கு என்னை வெச்சு வெளையாடுறீங்க‌" அப்ப‌டின்னு சொல்ல‌லாம்னு நென‌ச்சேன்.
ஆனா பாவி ப‌ய‌ அதுக்குள்ள‌ கால் க‌ட் ப‌ண்ணிட்டான். ந‌ட‌த்துங்க‌டா...நட‌த்துங்க‌
ச‌ரி நீயே ம‌றுப‌டியும் கால் ப‌ண்ணி திட்டிருக்க‌லாமேனு நீங்க் லாஜிக்கா கேக்க‌லாம், ஆனா என்ன‌ ப‌ண்ற‌து, அறியா பைய‌ன் தெரியாம‌ செஞ்சுட்டான். ச‌ரி பொழைச்சு போக‌ட்டும்னு விட்டுட்டேன். ஏன்னா நான் ரொம்ப‌ ந‌ல்ல‌வ‌ன்ன்ன்ன்ன்ன்ன், எவ்ளோ அடிச்சாலும் தாங்குவேன்னுதான‌ என‌க்கு மெஸெஜ் அனுப்புனான்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.................

5 comments:

 1. ங்ங்கொய்யாலே, அப்ப‌னும், புள்ளையும் வெளையாட‌ற‌தா இருந்தா பொம்மைய‌ வெச்சு வெளையாடுங்க‌டா, எதுக்கு என்னை வெச்சு வெளையாடுறீங்க‌" அப்ப‌டின்னு சொல்ல‌லாம்னு நென‌ச்சேன்.


  நீங்க ரொம்ப நல்லவரு!!!!!!!!
  உங்களை பற்றி நாலுபேறுகிட்ட நானும் சொல்லுறேன்...

  ReplyDelete
 2. பின்னூட்ட‌த்திற்கு ந‌ன்றி குண‌சீல‌ன் சார்!

  //நீங்க ரொம்ப நல்லவரு!!!!!!!! உங்களை பற்றி நாலுபேறுகிட்ட நானும் சொல்லுறேன்...//

  நீங்க‌ ஆசை‌ப்ப‌டும்போது நான் வேணாம்னுலாம் சொல்ல‌மாட்டேன்..ஹி..ஹி..(அப்ப‌டியாவ‌து நாலு பேர் வ‌ந்து ந‌ம்ம‌ வ‌லைப்பூ ப‌க்கம் எட்டிப்பாப்பாங்க‌ளான்னு ஒரு ந‌ப்பாசைதான்)

  ReplyDelete
 3. எங்க வீட்டுக்குகூட இப்படி ஒரு முறை நைட்ல... ஒரு கால், வருது... அப்புறம் கட் ஆகுது, பயந்துப்போய் வந்த நம்பருக்கு கால் பண்ணா ஏதோ அவங்க "குழந்தை" செய்ததா சொன்னாங்க.

  ReplyDelete
 4. வாங்க‌ ப்ரியா

  //பயந்துப்போய் வந்த நம்பருக்கு கால் பண்ணா ஏதோ அவங்க "குழந்தை" செய்ததா சொன்னாங்க//

  குழ‌ந்தைக்கு செல்ல‌ம் குடுக்க‌ற‌துல‌ த‌ப்பில்லீங்க‌
  "செல்"லை குடுத்துட‌றாங்க‌, நாம‌தான் மாட்டிகிட்டு முழிக்கிறோம்!

  ReplyDelete
 5. che enga veetla nan china pilaya iruntha apo cell tharala thanthu iruntha inaram ethna perah kalaichirupen miss paniten eh

  ReplyDelete