Friday, May 29, 2009

இன்னைக்கு ஒரு க‌தை!


ரொம்ப‌ நாள் க‌ழிச்சு இன்னைக்கு ஒரு க‌தை எழுத‌லாம்னு நென‌க்குறேன். புடிக்குதோ இல்லையோ த‌ய‌வுசெய்து ப‌டிச்சிடுங்க‌. க‌தையை ம‌ட்டும் தூய‌த‌மிழ், பேச்சுத்த‌மிழ் ரெண்டும் க‌ல‌ந்து எழுதிடுறேன், கொஞ்ச‌ம் அட்ஜ‌ஸ்ட் ப‌ண்ணிக்க‌ங்க‌! இனி...

வீட்டு க‌த‌வைத் த‌ட்டினேன்.

"யாரு?" உள்ளிருந்து குர‌ல் கேட்ட‌து.

"இங‌க‌ சோம‌சுந்த‌ர‌ங்க‌ற‌வ‌ர‌ பாக்க‌ணும்"

"நான்தான் உள்ள‌ வாங்க‌"

வீட்டு ஹாலில் அம‌ர்ந்திருந்த‌ பெரிய‌வ‌ர் மூட்டு வ‌லிக்கான‌ தைல‌த்தை எடுத்து தேய்த்துக்கொண்டிருந்தார். அருகிலிருந்த‌ நாற்காலியில் அம‌ர‌ச்சொன்னார்.

"சார் என் பேரு ராம் ஷ‌ர்மா. ஷ‌ர்மா ஹாஸ்பிட‌ல் ப‌த்தி கேள்விப‌ட்டிருப்பீங்க‌ன்னு நென‌க்குறேன். அத‌னோட‌ மேனேஜிங் டைர‌க்ட‌ர் நான்தான்."

"ஆங் தெரியுங்க‌, ப‌க்க‌த்து வீட்டு விஸ்வ‌நாத‌ன் உங்க‌ ஆஸ்ப‌த்திரில‌தான் அல்ச‌ருக்கு வைத்திய‌ம் பாத்துக்கிட்டான். இப்ப‌ கொஞ்ச‌ம் ச‌வுக‌ரிய‌ம்தான்...ஆமா நீங்க‌ என்ன‌ விஷ‌ய‌மா?..."

"உங்க‌ ப‌க்க‌த்து கிராம‌த்துல‌ ஒரு ஹாஸ்பிட‌ல் க‌ட்ட‌லாம்னு ப்ளான் ப‌ண்ணியிருக்கோம். அதுக்காக கொஞ்ச‌ நாள் நான் இங்க‌ த‌ங்க‌ணும். அந்த‌ ஊர்ல‌ த‌ங்க‌ற‌துக்கு அந்த‌ள‌வு வ‌ச‌தியில்ல‌‌. உங்க‌ வீட்டு எதிர்ல‌ இருக்க‌ற‌ ப‌ங்க‌ளா என‌க்கு ரொம்ப‌ புடிச்சுபோச்சு. அது உங்க‌ளோட‌துன்னு சொன்னாங்க‌..நான் வாங்கிக்க‌லாம்னு நென‌க்குறேன்...அதான் உங்க‌ள‌ பாத்து அத‌ ப‌த்தி பேசிட்டு போக‌லாம்னு வ‌ந்தேன். ஆமா நீங்க‌ ஏன் அவ்வ‌ள‌வு பெரிய‌ ப‌ங்க‌ளாவ‌ விட்டுட்டு இந்த‌ வீட்டுல‌ இருக்கீங்க‌?"

"எம் பொண்ணு பெங்க‌ளூர்ல‌ இருக்கா. பைய‌ன் அமெரிக்கால‌ ஒரு க‌ம்ப்யூட்ட‌ரு க‌ம்பெனியில‌ வேல‌ பாக்குறான். இங்க‌ நானும் என் ச‌ம்சார‌மும் ம‌ட்டும்தான். ரெண்டு பேரும் எங்களோட‌ வ‌ந்து இருங்க‌ன்னு கூப்புடுறாங்க‌...ஆனா அந்த‌ குளுர்லாம் ந‌மக்கு ஒத்துக்காது. இங்க‌ என‌க்கும் இவ‌ளுக்கும் எதுக்கு பெரிய‌ பங்க‌ளா? அத‌னாலதான் மூணு வ‌ருஷ‌மா இங்க‌ இருக்க‌றோம்."

கொஞ்ச‌ம் தண்ணீர் குடித்துவிட்டு தொட‌ர்ந்தார்.

"வெளியே சொல்லியிருப்பாங்க‌, என‌க்கும் ம‌றைக்க‌புடிக்காது. ரெண்டு வ‌ருஷ‌ம் முன்னாடி ஒரு ப‌டுபாவி ப‌ய அந்த‌ ப‌ங்க‌ளாவுல‌ போய் த‌ற்கொலை ப‌ண்ணிக்கிட்டான். அதுல‌யிருந்து யாருமே அத வாங்குற‌துல‌ விருப்ப‌ம் காட்ட‌ல‌. இப்ப‌ நீங்க‌ வேணுங்க‌றீங்க‌, யோசிச்சு சொல்லுங்க‌. ஏன்னா நாளைக்கு எந்த‌ பிர‌ச்னையும் வ‌ர‌க்கூடாது பாருங்க‌"

"சார் நானும் கேள்விப‌ட்டேன். என‌க்கு இதுல‌ல்லாம் ந‌ம்பிக்கை இல்ல‌. உங்க‌ளுக்கு ஓகேன்னா நான் இப்ப‌வே ஒரு த‌ட‌வ‌ ப‌ங்க‌ளா உள்ள‌ போய் பாத்துட்டு முடிவு ப‌ண்ணிட‌லாம்னு நென‌க்குறேன். நீங்க‌ என்ன‌ சொல்றீங்க‌?"

"ச‌ரிப்பா, எனக்கு நேத்துல‌யிருந்து மூட்டுவ‌லியா இருக்கு. என்னால‌ இப்போ எழுந்து வ‌ர‌முடியாது. சாவி அந்த‌ ஆணியில‌ இருக்கு. அத‌னால‌ கொஞ்ச‌ம் சிர‌ம‌ம் பாக்காம‌ நீங்க‌ளே போய் பாத்துட்டு வ‌ந்துடுங்க‌"
"ப‌ர‌வால்லங்க‌, நான் பாத்துக்க‌றேன்"

சாவியை எடுத்துக்கொண்டு அந்த‌ ப‌ங்க‌ளா முன் வந்து நின்றேன். ராமு அண்ண‌ன் (என் கார் டிரைவ‌ர்) சிக‌ரெட் பிடிக்க‌ எங்கேயா ஒதுங்கிவிட்டார். ஆளைக்காணோம். க‌த‌வைத் திற‌ந்து உள்ளே நுழைந்தேன். கொஞ்ச‌ம் 'ச‌ந்திர‌முகி' டைப்பில் லேசாக‌ ப‌ய‌முறுத்த‌த்தான் செய்த‌து. ஆனால் க‌ட்ட‌ப்ப‌ட்டிருந்த‌ வித‌ம் என‌க்கு மிக‌வும் பிடித்திருந்த‌து.

"ஹ‌லோ" என்று மித‌மான‌ குர‌லில் கூறினேன். "ஹ‌லோ ஹ‌லோ லோ...." என்று எதிரொலித்த‌து. வாவ்! என‌க்கு அது மிக‌வும் பிடித்திருந்த‌து. ம‌ன‌து சிறு குழந்தையாகி எதிரொலியை ர‌சித்த‌து.

"ஐ லைக் திஸ்" என்று கொஞ்ச‌ம் ச‌த்த‌மாக‌ கூறினேன். என‌க்கு தூக்கிவாரிப்போட்ட‌து. கார‌ணம், இந்த‌ முறை நான் "ஐ லைக் திஸ்" என்று சொன்ன‌தற்கு நான் கேட்ட‌து எதிரொலி அல்ல‌..."வெல்க‌ம்!!!"

4 comments:

  1. ஹ்ம்ம், Mr. குறும்பன், இத இத இதத்தான் உங்ககிட்ட எதிர்பார்த்தேன். இன்னும் இன்னும் இன்னும் எழுதுங்க

    அன்புடன்
    ஹரீஷ நாராயண்

    ReplyDelete
  2. "ஹ்ம்ம், Mr. குறும்பன், இத இத இதத்தான் உங்ககிட்ட எதிர்பார்த்தேன். இன்னும் இன்னும் இன்னும் எழுதுங்க"


    ஹி..ஹி..தேங்க்ஸ் Director! உண்மையாவே ந‌ல்லாயிருக்கான்னு என‌க்கு தெரிய‌ல‌..ஆனா என்னை ஊக்க‌ப்ப‌டுத்த‌ற‌ உங்க‌ வார்த்தைக‌ளுக்கு ம‌றுப‌டியும் ஒரு BIG Thanks Director!

    ReplyDelete
  3. ந‌ன்றி ஏஞ்ச‌ல், funnyயா? சே! த்ரில்லா ஒரு க‌தை எழுத‌லாம்னு பாத்தா funnyனு சொல்லிட்டீங்க‌ளே:)

    ReplyDelete