Thursday, May 21, 2009

ஆர‌ம்பிச்சிட்டா‌ருய்யா!




ந‌ட‌ந்து முடிந்த‌ 2009 பாராளும‌ன்ற‌ தேர்த‌லில், ராம்விலாஸ் ப‌ஸ்வான், ம‌ணிச‌ங்க‌ர் அய்ய‌ர் உள்ளிட்ட விஐபி வேட்பாளர்க‌ள் தோல்வி க‌ண்டுள்ள‌ன‌ர். ந‌டிக‌ர் சிர‌ஞ்சீவியும் தான் போட்டியிட்ட‌ இரு தொகுதிக‌ளில் ஒன்றில் தோல்வியுற்றிருக்கிறார். தோல்விக்கான‌ கார‌ண‌ம் குறித்து இவ‌ர்க‌ள் யார் மீதும் ப‌ழிபோட‌வில்லை. ஆனால் ம‌ருத்துவ‌ர் ராம‌தாஸ் தேர்த‌ல் க‌மிஷ‌ன் மீது ப‌ழிபோட்டு த‌ன் எரிச்ச‌லை வெளிப்ப‌டுத்தியிருக்கிறார்.

"இந்த‌ தேர்த‌லில் திமுக‌ ப‌ண‌ம் கொடுத்து ம‌க்க‌ளின் ஓட்டுக்க‌ளை வாங்கியுள்ள‌து. இது ந‌ன்றாக‌ தெரிந்தும் தேர்த‌ல் க‌மிஷ‌ன் எந்த‌ ந‌ட‌வ‌டிக்கையும் எடுக்க‌வில்லை. தேர்த‌ல் ம‌ற்றும் வாக்கு எண்ணிக்கை நாட்க‌ளில் பார்வையிட‌ வ‌ரும் த‌மிழ‌க‌ த‌லைமைத் தேர்த‌ல் அதிகாரி ந‌ரேஷ் குப்தா இந்த‌முறை வ‌ர‌வில்லை. எந்த‌ ந‌ட‌வ‌டிக்கையும் எடுக்காத‌ இவ‌ர் பேசாம‌ல் மாடு மேய்க்க‌ப் போக‌லாம்."

"அதிமுக‌ அணியில் இருந்துகொண்டே ம‌க்க‌ள் பிர‌ச்னைக்காக‌ப் போராடுவோம்"

குறும்ப‌னின் சில‌ கேள்விக‌ள்:

1. இத‌ற்கு முன்பு நீங்க‌ள் திமுக‌ கூட்ட‌ணியில் இருந்த‌போது ந‌ட‌ந்த‌ தேர்த‌ல்க‌ளிலெல்லாம் அவ‌ர்க‌ள் ப‌ண‌ம் கொடுத்த‌தேயில்லையா?

2. உங‌க‌ளின் த‌ற்போதைய‌ கூட்ட‌ணியான‌ அதிமுக‌வின‌ர், ம‌க்க‌ளுக்கு இந்த‌ தேர்த‌லில் ப‌ண‌ம் கொடுக்க‌வில்லையா?

3. ந‌ரேஷ் குப்தா என்ன‌ செய்திருக்க‌வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்க‌ள்? உங‌க‌ள் க‌ட்சியின‌ர் போட்டியிட்ட‌ தொகுதிக‌ளுக்கெல்லாம் சென்று பார்வையிட்டிருக்க‌வேண்டுமென்றா? அவ‌ர் என்ன‌ த‌மிழ‌க‌ த‌லைமைத் தேர்த‌ல் அதிகாரியா, இல்லை பாம‌க‌வின் தேர்த‌ல் அதிகாரியா?

4. ஒரு ப‌த்திரிக்கையாளர்க‌ள் ச‌ந்திப்பிலேயே, கொஞ்ச‌மும் நாக‌ரிக‌மின்றி "அவ‌ர் மாடு மேய்க்க‌ப் போக‌லாம்" என்கிறீர்க‌ளே, இதுதான் ஒரு க‌ட்சித் த‌லைவ‌ரின் ப‌ண்பாடா?

5. 2011 ச‌ட்டச‌‌பை தேர்த‌லுக்கும் இதே கூட்ட‌ணியில் இருப்போம் என்று உங்க‌ளால் உறுதியாக‌ சொல்ல‌முடியுமா?

அர‌சிய‌ல் க‌ட்சிக‌ள் அணி மாறுவ‌து ச‌க‌ஜ‌ம்தான். எந்த‌ க‌ட்சியும் இத‌ற்கு விதிவில‌க்கில்லை. திமுக‌வும் பாஜ‌க‌வுட‌ன் கூட்ட‌ணி அர‌சில் இருந்துவிட்டு பின்பு காங்கிர‌ஸுட‌ன் கூட்ட‌ணி அமைத்த‌து. ஆனால் அத‌ற்கு பின்பு அவ‌ர்க‌ள் பாஜ‌க‌வை கீழ்த்த‌ர‌மாக‌ விமர்சிக்க‌வில்லை. நீங்க‌ளோ க‌டைசி நிமிட‌ம் வ‌ரை ப‌த‌வி சுக‌ம் அனுப‌வித்துவிட்டு பின்பு அவ‌ர்களையே ம‌ண்ணை க‌வ்வ‌வைப்போம் என்றீர்க‌ள். இல‌ங்கைத் த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ கூட்ட‌ணியை விட்டு வெளியே வந்தோம் என்றீர்க‌ளே, அன்றுதான் உங்க‌ளுக்கு இல‌ங்கை பிர‌ச்னை என்ன‌வென்று புரிந்ததா? "பொலிட்டிக‌ல் பிராஸ்டிட்யூட்" என்ற‌ வார்த்தைக்கு சரியாக‌ பொருந்தும் ஒரே அர‌சிய‌ல்வியாதி நீங்க‌ள்தான்.

சில‌ நாட்க‌ள் வாயைத் திற‌க்காம‌ல் இருப்ப‌துதான் இப்போதைக்கு ம‌க்க‌ளுக்கும் உங்க‌ள் க‌ட்சிக்கும் நீங்க‌ள் செய்யும் மிக‌ப்பெரிய தொண்டு! அதுவ‌ரை, அம்மாவிட‌ம் பேசி எப்ப‌டி அன்பும‌ணியை 2010ல் ராஜ்ய‌ ச‌பா உறுப்பின‌ராக‌த் தொட‌ர‌வைப்ப‌தென்று யோசித்துக்கொண்டிருங்க‌ள்...



No comments:

Post a Comment