Saturday, May 16, 2009

தேர்த‌லுக்கு பின்பு...



இந்திய‌ பாராளும‌ன்ற‌த்திற்கான‌ 2009 தேர்த‌ல் முடிவுக‌ள் இன்று அறிவிக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. எந்த‌ கூட்ட‌ணிக்கும் மெஜாரிட்டி கிடைக்க‌ப்போவ‌தில்லை என்று க‌ருத்துக்க‌ணிப்புக‌ள் (இத‌ யார்தான் க‌ண்டுபுடிச்சாங்க‌ளோ) கூறுகின்ற‌ன‌.

புதிய‌ அர‌சு அமைப்ப‌த‌ற்கு இதுவ‌ரை டாம் & ஜெர்ரியாக‌ இருந்த‌ க‌ட்சிக‌ளெல்லாம் ஒன்று கூடி கூட்ட‌ணி க‌ட்சிக‌ளின் கூட்ட‌ம் என்று வெளியில் சொல்லிக்கொண்டு உள்ளே ப‌த‌வி பேர‌ம் ந‌ட‌த்திக்கொண்டிருப்ப‌ர். இப்பொழுது உள்ள‌ நிலைமையைப் பார்க்கும்பொழுது மீண்டும் காங்கிர‌ஸ்தான் ஆட்சிக்கு வ‌ரும் என்று தோன்றுகிற‌து.

திமுக‌வை பொறுத்த‌வ‌ரை வ‌ழ‌க்க‌ம்போல் டி.ஆர்.பாலுவையும், த‌யாநிதி மாற‌னையும் ம‌த்திய‌ அமைச்ச‌ர்க‌ளாக்க‌ குட்டி க‌ர‌ண‌ம்...இல்லை..பெரிய‌ க‌ர‌ண‌ம் போட்டாவ‌து ஜெயித்துவிடுவ‌ர். லிஸ்ட்டில் இந்த‌ முறை அழகிரியும் சேரும் வாய்ப்பு இருப்ப‌தால் க‌லைஞ‌ருக்கு க‌டும் த‌லைவ‌லி காத்துக்கொண்டிருக்கிற‌து. ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்குத்தான் இத‌ய‌த்தில் இட‌ம், ம‌க‌னாயிற்றே ம‌த்திய‌ அமைச்ச‌ர‌வையிலேயே இட‌ம் வாங்கி கொடுப்பார் அன்புள்ள‌ அப்பா!

ஒரு முன்னாள் முத‌ல்வர் (ப‌ன்னீர் செல்வ‌ம்) த‌ன் க‌ட்சியின் த‌லைமையின் காலில் சாஷ்டாங்க‌மாக‌ விழுவ‌தெல்லாம் இந்தியாவிலேயே அதிமுக‌வில் ம‌ட்டும்தான் ந‌ட‌க்கும். உண்மையில் சொல்ல‌ப்போனால் ஜெ.வுக்கு இருக்கும் துணிச்ச‌ல் இங்கு வேறு எந்த‌ அர‌சிய‌ல்வாதிக்கும் கிடையாது. ஆனால் அவ‌ர் அதை ச‌ரியான‌ முறையில் ப‌ய‌ன்ப‌டுத்தாம‌ல், ம‌க்க‌ளுக்காக‌ க‌ள‌த்தில் இற‌ங்கி போராடாம‌ல், த‌ன் க‌ட்சியின‌ரை காலில் விழும் காமெடிய‌ன்களாக‌ வைத்திருப்ப‌திலேயே கால‌த்தை த‌ள்ளுகிறார். ம‌த்திய‌ அர‌சுக்கு ஆத‌ர‌வு கொடுக்க‌ வேண்டி வ‌ந்தால் இவ‌ர் போட‌ப்போகும் முத‌ல் நிப‌ந்த‌னை "த‌மிழ‌க‌த்தில் ஆட்சியைக் க‌லைக்க‌ வேண்டும்". அட‌ போங்க‌ மேட‌ம் நீங்க‌ளும் உங்க‌ கோரிக்கையும்...கொட‌நாடுவில் ஓய்வெடுக்க‌ த‌யாராகிவிட்டிருப்பீர்க‌ளே!

அவ்வ‌ள‌வுதான்..ர‌த்த‌த்தின் ர‌த்த‌ங்க‌ளுக்கு இன்னும் மூன்று அல்ல‌து நான்கு மாத‌ங்க‌ளுக்கு அம்மாவின் த‌ரிச‌ன‌ம் கிடைக்காது.....

1 comment:

  1. எனக்கு அரசியலில் அவ்வளவாக சிரத்தை ஏற்படுவதில்லை, இருந்தாலும் என் நண்பர் ரகுவின் குறும்பான எழுத்து நடையை படிக்கும் தாகம் வெகுநாட்களாக இருந்ததால் இந்த வலைப்பூ எனக்கு சுவையாக இருக்கிறது.
    கொஞ்சம் அரசியலையும் தாண்டி எழுதுங்கள் ரகு அவர்களே! நமது சங்கு சிங்கு-வை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. அதிலிருந்து தங்கள் எழுத்தை படிக்கும் தாகம் அதிமாகிப்போயிருக்கிறது.

    அன்புடன்
    ஹரீஷ் நாராயண்

    ReplyDelete