Friday, May 22, 2009

நியூட்ட‌னின் 3ஆம் விதி


சில‌ மாத‌ங்க‌ளுக்கு முன்பு இந்த‌ ப‌ட‌த்தைப் ப‌ற்றிய‌ அறிவிப்பு வ‌ந்த‌போதே இப்ப‌ட‌த்தைக் க‌ட்டாய‌ம் பார்க்க‌வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். கார‌ண‌ம், ப‌ட‌த்தின் வித்தியாச‌மான‌ த‌லைப்பு. ஆனால் ஹீரோ எஸ்.ஜே.சூர்யா என்ற‌வுட‌ன் ம‌ன‌து ச‌ற்று பின்வாங்கிய‌து. "அன்பே ஆருயிரே" பார்த்த‌தினால் வ‌ந்த‌ விளைவு. ஆனால் இப்ப‌ட‌த்தின் ஸ்டில்க‌ளைப் பார்த்த‌போது, ச‌ரி கொஞ்ச‌ம் ரிஸ்க் எடுப்போம் என்று முடிவு செய்தேன்.

ஒரு த‌னியார் டிவி சேன‌லில் தொகுப்பாளினியாக‌ வேலை செய்யும் எஸ்.ஜே.சூர்யாவின் காத‌லியான‌ ஷாயாலியை சீர‌ழித்துக் கொன்றுவிடுகிறார் சேன‌ல் அதிப‌ர் ராஜீவ் கிருஷ்ணா. ச‌ரியாக‌ ஒரு வ‌ருட‌ம் க‌ழித்து த‌ன் காத‌லி இற‌ந்த‌ அதே நாளில் அதே நேர‌த்தில் சேனல் அதிப‌ரைக் கொல்ல‌ முடிவு செய்கிறார் காத‌ல‌ன். எப்ப‌டி கொல்கிறார் என்ப‌தை விறுவிறுப்பான‌ திரைக்க‌தை ம‌ற்றும் காட்சிய‌மைப்பு மூல‌ம் சொல்லி கைத்த‌ட்ட‌ல் வாங்குகிறார் இய‌க்குன‌ர் தாய் முத்துசெல்வ‌ன்.

எஸ்.ஜே.சூர்யா என்றாலே இர‌ட்டை அர்த்த‌ வ‌ச‌ன‌ம், ஆபாச‌ம் போன்ற‌வை இருந்தே ஆக‌வேண்டுமா என்ன‌? ந‌ல்ல‌வேளை ஒன்றிர‌ண்டு காட்சிக‌ளோடு இவ‌ற்றை இப்பட‌த்தில் நிறுத்திக்கொண்டார். ம‌ற்ற‌ப‌டி ந‌டிப்பில் திற‌ன்ப‌ட‌ செய்துள்ளார் (வில்ல‌னோடு போனில் பேசும் காட்சிக‌ளில் அவ‌ருடைய‌ குர‌ல் பெரிய‌ ப்ள‌ஸ் பாயிண்ட்). புதுமுக‌ம் ஷாயாலி க‌ண்க‌ளை உருட்டியே ந‌டிக்க‌ முய‌ற்சி செய்திருக்கிறார். "ஆஹா"வில் பார்த்த‌ ராஜீவ் கிருஷ்ணாவா இது! (சில‌ காட்சிக‌ளில் ச‌ற்று ஓவ‌ராக‌ இருந்தாலும்) நன்றாக‌வே மிர‌ட்டுகிறார், ப‌த‌றுகிறார், ப‌ய‌ப்ப‌டுகிறார்.

முத‌ல் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் ச‌ற்றே ச‌றுக்குகிற‌து. அதுவும் ப்ளாஷ்பேக் காட்சிக‌ள் கொஞ்ச‌ம் இழுவை. த‌மிழில் த்ரில்ல‌ர் ப‌ட‌ங்க‌ள் வ‌ருவ‌து மிக‌வும் குறைவு. வ‌ரும் ஒரு சில‌வ‌ற்றையும் ஓவ‌ராக‌ குறைகூறுவ‌தில் என‌க்கு விருப்ப‌மில்லை. ஒரு சில‌ காட்சிக‌ளில் லாஜிக் இடித்தாலும், வேகமாக‌ போகும் திரைக்க‌தை அதை ம‌ற‌க்க‌டிக்க‌ச்செய்கிற‌து. அனாவ‌சிய‌ ஹீரோயிஸ‌ம் இல்லாத‌ இது போன்ற‌ ப‌டத்தில் ந‌டித்த‌த‌ற்காகவே எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஒரு கைகுலுக்க‌ல்!

சுருக்க‌மாக‌ சொன்னால் த்ரில்ல‌ர் விரும்பிக‌ள் (ஒருமுறை ம‌ட்டும்) பார்க்க‌வேண்டிய ப‌ட‌மிது!

1 comment:

  1. அன்புள்ள குறும்பன் அவர்களுக்கு,
    நானும் இந்த படத்தை பார்த்தேன். உண்மையிலேயே நல்ல முயற்சியுடன் எடுக்கப்பட்ட படம் என்று அறிந்து மகிழ்ந்தேன். கடைசி காட்சிகள் 'ஷூட்டெம் அப்' என்ற ஆங்கில படத்திலிருந்து சுட்டு(ஷூட்) இருந்தார்கள். ஆனாலும் நல்ல விறுவிறுப்பாக சென்றதை நினைத்து சமாதானம் அடைந்தேன். பாடல்கள் சற்றும் பொருந்தவேயில்லை, சரி டிஸ்ட்ரிபியூட்டர்கள் படத்தை வாங்க வேண்டும் என்ற காரணத்திற்காக இயக்குனர் ரிஸ்க் எடுக்க விரும்பாமலிருந்திருப்பார் போல.
    படத்தின் + ராஜூவ் கிருஷ்ணா, படத்தின் -SJS (சில காட்சிகளில் மட்டும்தான் -) பல இடங்களில் அவர் கதைக்கு பொருந்தவே செய்கிறார்.
    என் வரையில் இந்த படம் மறக்க முடியாத படம்தான் ஏனென்றால், இந்த படத்தை பார்த்துவிட்டு வீட்டுக்கு போகும்போதுதான் எனக்கு பைக் ஆக்ஸிடெண்ட் நடந்தது. EVERY ACTION HAS ITS OWN EQUAL & OPPOSITE REQCTION. அதனால், என்னை பைக்கிலிருந்து கீழே தள்ளி மண்ணை கவ்வ வைத்த அந்த நாயை அடுத்த வருஷம் அதே நாள் பைக்கை ஏற்றி கொல்லாமல் விடமாட்டேன். சாரி படம் பார்த்த (நியூட்டன்) எஃபெக்டு.

    அன்புடன்
    ஹரீஷ் நாராயண்

    ReplyDelete